< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
மின்சாரம் பாய்ந்து பெண் பலி
|10 Jun 2022 12:00 AM IST
மின்சாரம் பாய்ந்து பெண் பலியானார்.
கோட்டைப்பட்டினம்:
கோட்டைப்பட்டினம் அருகே விளத்தூர் வடக்கு குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி லலிதா (வயது 43). நேற்று காலை வழக்கம்போல் லலிதா எழுந்து கோழியை திறந்துவிட சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற மின்சார கம்பி இரும்பு முள்வேலி மீது அறுந்து கிடந்து உள்ளது. இதனை கவனிக்காத லலிதா இரும்பு முள்வேலியை தொட்டுள்ளார். இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஜெகதாப்பட்டினம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் லலிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.