< Back
மாநில செய்திகள்
விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் மின் இணைப்புகள் - தமிழ்நாடு மின்வாரியம் சுற்றறிக்கை
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் மின் இணைப்புகள் - தமிழ்நாடு மின்வாரியம் சுற்றறிக்கை

தினத்தந்தி
|
19 Nov 2022 7:32 PM IST

தமிழகத்தில் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் மூலம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் உள்ள அனைத்து தலைமை பொறியாளர்களுக்கும் தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் மூலம் முன்னுரிமை அடிப்படையில் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் ஆழ்துளை குழாய் மற்றும் திறந்தவெளி கிணறுகளுக்கு ஆண்டுக்கு 2 ஆயிரம் விவசாய மின் இணைப்புகள் வழங்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. விவசாய மின் இணைப்புகளில் 2 மாதத்திற்கு ஒருமுறை மின் கட்டணம் கணக்கிட வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட துறை உதவி இயக்குனரிடம் மின் நுகர்வு தொகை வசூல் செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்