மதுரை
மதுரையில் மின்கம்பத்தை மாற்றி அமைக்க லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது
|மதுரையில் மின்கம்பத்தை மாற்றி அமைக்க லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது செய்யப்பட்டார்.
அவனியாபுரம்
மதுரையில் மின்கம்பத்தை மாற்றி அமைக்க லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது செய்யப்பட்டார்.
மின்கம்பம் மாற்ற லஞ்சம்
மதுரை மாவட்டம் நாகமலைபுதுக்கோட்டையை சேர்ந்தவர் பழனிமுருகன்(வயது 46). இவர் அவனியாபுரத்தில் உள்ள மின்சார துறை வணிக ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் அவனியாபுரம் சி.எஸ்.ஐ. நகரை சேர்ந்த முனியாண்டி(52) என்பவர் தன் வீட்டில் அருகில் இருக்கும் மின் கம்பத்தை மாற்றி அமைக்க பழனிமுருகனை நாடினார். அதற்கு அவர் முனியாண்டியிடம் ரூ.40 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
இதுகுறித்து முனியாண்டி லஞ்சம் ஒழிப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து ரசாயனம் தடவிய நோட்டுகள் ரூ.40 ஆயிரத்தை முனியாண்டியிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கொடுத்து அனுப்பினர். அந்த பணத்தை முனியாண்டி, பழனி முருகனிடம் கொடுத்தார்.
கைது
அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு துறை துணை சூப்பிரண்டு சத்தியசீலன், இன்ஸ்பெக்டர் குமரகுரு மற்றும் போலீசார், மின்சாரத்துறை வணிக ஆய்வாளர் பழனிமுருகனை கையும் களவுமாக பிடித்தனர். மேலும் ரூ.40 ஆயிரத்தை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
மின்வாரிய அதிகாரி ஒருவர் லஞ்சம் பெற்று கைதான சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.