< Back
மாநில செய்திகள்
தமிழகத்தில் இருந்து மின்சாரம், உணவு பொருட்களை அனுப்பக்கூடாது
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

தமிழகத்தில் இருந்து மின்சாரம், உணவு பொருட்களை அனுப்பக்கூடாது

தினத்தந்தி
|
11 Oct 2023 2:09 AM IST

காவிரியில் தண்ணீர் தராத கர்நாடகாவுக்கு தமிழகத்தில் இருந்து மின்சாரம், உணவு பொருட்களை அனுப்பக்கூடாது என்று நடிகை கஸ்தூரி கூறினார்.

சுவாமிமலை;

காவிரியில் தண்ணீர் தராத கர்நாடகாவுக்கு தமிழகத்தில் இருந்து மின்சாரம், உணவு பொருட்களை அனுப்பக்கூடாது என்று நடிகை கஸ்தூரி கூறினார்.

பேட்டி

தஞ்சை மாவட்டம் கும்பகோணம், சுவாமிமலை பகுதியில் உள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்வதற்காக வந்த நடிகை கஸ்தூரி நிருபர்களிடம் கூறியதாவது:-காவிரி பிரச்சினையில் ஆளும் கட்சியினர் குரல் கொடுப்பதற்கும் மற்ற கட்சியினர் குரல் கொடுப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. காவிரி பிரச்சினையின் வரலாற்றை இன்றைய இளையதலைமுறையினர் தெரிந்து வைத்திருக்க வேண்டும். வரலாற்றுப்படி தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, கேரளா ஆகிய 4 மாநிலங்களுக்கும் காவிரி மேல் ஒரு உரிமை உள்ளது. இதில் தமிழகத்துக்கு மட்டும் 75 சதவீத உரிமை உள்ளது.

சினிமாவில் சாதி

காவிரி கர்நாடக மக்களின் தனிப்பட்ட சொத்து என்று நம்ப வைத்துள்ளனர். காவிரியில் நமக்கு தேவையான தண்ணீரை திறந்து விட வேண்டும். ஓட்டுக்கு யாராவது பணம் கொடுத்தால் வாங்காதீர்கள் என்று அரசியல்வாதிகள் கூறுவதில்லை. கர்நாடகாவில் நடிகர் சித்தார்த் கலந்து கொண்ட பட நிகழ்ச்சியில் ஒரு கும்பல் மிரட்டுகிறது. ஒரு போலீஸ் கூட இல்லாத நிலையில் ஒரு கும்பல் வந்து மிரட்டுவது மாநில அரசு ஆதரவு இல்லாமல் முடியாது.சினிமாவில் மதம் மற்றும் சாதி ரீதியான பிளவுகள் நிறைய வந்து விட்டது. சமீப காலமாக ஊறிக் கொண்டிருக்கும் ஒரு விஷமாக இதை நான் கவனிக்கிறேன். முன்பு சினிமாவில் பணியாற்றும் அனைவரும் சேர்ந்து ஒரே குடும்பமாய் பணியாற்றி வந்தோம்.

வேலை நிறுத்தம்

சாதி ரீதியிலான படம் எடுத்து அதை முற்போக்குத்துவம் என்று கூறுவதை நான் மறுக்கிறேன். தமிழ் சினிமாவில் கொச்சை வார்த்தைகள் இடம்பெறுவது முதல் முறை கிடையாது. லியோ படத்தில் அதுபோன்ற வசனம் விஜய் பேசி இருக்கக்கூடாது.இன்று(புதன்கிழமை) தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் நடக்கக்கூடிய வேலை நிறுத்தத்தை கர்நாடக எல்லையில் நடத்த வேண்டும். நாம் ஏன் நம்முடைய வருமானத்தை கெடுக்க வேண்டும். அவர்களுடைய(கர்நாடகாவின்) வருமானத்தை கெடுக்கலாம். காவிரியில் தண்ணீர் தராத கர்நாடகாவுக்கு தமிழகத்தில் இருந்து மின்சாரம், உணவு பொருட்களை அனுப்ப கூடாதுஇவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்