< Back
மாநில செய்திகள்
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்
மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி
|13 Jun 2023 11:59 PM IST
அரக்கோணம் அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலியானார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த செம்பேடு பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் சேட்டு என்கிற சிலம்பரசன் (வயது 26), எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார்.
சம்பவத்தன்று சிலம்பரசன் தண்ணீர் பிடிப்பதற்காக மின் மோட்டாருக்கு இணைப்பு கொடுக்கும் போது மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் அரக்கோணம் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.