< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி
|28 Aug 2022 1:42 PM IST
சென்னையை அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலியானார்.
சென்னையை அடுத்த புழல் கிருஷ்ணா நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் மாதவன் (வயது 42). எலக்ட்ரீசியனான இவர், நேற்று சென்னை கொளத்தூர் பூம்புகார் நகர் 2-வது பிரதான சாலையில் தியாகராஜன் என்பவருக்கு சொந்தமான கடையில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். உடனடியாக அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே மாதவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த மாதவனுக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.