< Back
மாநில செய்திகள்
மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலி
கரூர்
மாநில செய்திகள்

மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலி

தினத்தந்தி
|
11 Oct 2023 1:16 AM IST

க.பரமத்தி அருகே மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பரிதாபமாக இறந்தார்.

மின்சாரம் பாய்ந்தது

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே சத்திரப்பட்டியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 28), எலக்ட்ரீசியன். இவருடைய மனைவி ஷீலாதேவி. இவர்கள் கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே உள்ள தலையீத்துப்பட்டி என்ற ஊரில் சொந்தமாக வீடு வாங்கி வசித்து வந்தனர்.

இந்தநிலையில் கண்ணன் அதே ஊரை சேர்ந்த குணசேகரன் என்பவர் வீட்டில் எலக்ட்ரீசியன் வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து கண்ணன் தூக்கி வீசப்பட்டார்.

சாவு

இதையடுத்து அவரை சக தொழிலாளர்கள் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், கண்ணன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து ஷீலாதேவி கொடுத்த புகாரின் பேரில் க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்