< Back
மாநில செய்திகள்
மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி
சிவகங்கை
மாநில செய்திகள்

மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி

தினத்தந்தி
|
7 July 2023 12:15 AM IST

மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலியானார்.

இளையான்குடி,

இளையான்குடி அருகே உள்ள சாலைக்கிராமம் வடக்கு வலசை காடு பகுதியில் வசித்து வந்தவர் பூபாலன் (வயது 46). எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார். இதே பகுதியைச் சேர்ந்த நாகலிங்கம் என்பவரின் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தபோது அருகில் சென்ற மின்வயர் அவர் மீது உரசியது. இதில் தூக்கி வீசப்பட்ட பூபாலன் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பூபாலன் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக சாலைக்கிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்