< Back
மாநில செய்திகள்
திருப்பத்தூர்
மாநில செய்திகள்
மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி
|14 Jun 2022 10:58 PM IST
வாணியம்பாடி அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலியானார்.
வாணியம்பாடி
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த கூத்தாண்டகுப்பம் பகுதியை சேர்ந்தவர் முரளி (வயது 47), எலக்ட்ரீசியன். இவர் சின்னமோட்டுர் பகுதியில் ரகுநாதன் என்பவருக்கு சொந்தமான அடுக்குமாடி கட்டிடத்தின் மேல்தளத்தில் மின் இணைப்பு பைப் பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக இவரை மின்சாரம் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் தூக்கி வீசப்பட்ட முரளி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.