< Back
மாநில செய்திகள்
நாமக்கல்
மாநில செய்திகள்
விபத்தில் எலக்ட்ரீசியன் பலி
|16 May 2023 12:15 AM IST
திருச்செங்கோடு அருகே விபத்தில் எலக்ட்ரீசியன் இறந்தார்.
திருச்செங்கோடு
சேலம் மாவட்டம், கொல்லப்பட்டி இரும்பாலை பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் நந்தகுமார் (வயது 22). எலக்ட்ரீசியன். நேற்று முன்தினம் இரவு, நந்தகுமார் மோட்டார் சைக்களில் பெரியமணலி பகுதியில் இருந்து வையப்பமலை நோக்கி சென்றுள்ளார். அப்போது டிராக்டர் ஒன்று சாலையைக் கடக்க முயன்றுள்ளது. இதில் நந்தகுமாரின் மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக டிராக்டர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த நந்தகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து எலச்சிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.