< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்
எலக்ட்ரீசியனை கத்தியால் வெட்டி பணம் பறிப்பு - 3 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு
|3 Jun 2023 2:07 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் எலக்ட்ரீசியனை கத்தியால் வெட்டி பணம் பறித்த 3 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் கண்டிகை மேட்டு தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 29). இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை மோட்டார் சைக்கிளில் மறைமலைநகர் அருகே உள்ள கருநிலம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் 2 மோட்டார் சைக்கிளில் வந்த 3 நபர்கள் பிரபாகரனை வழிமறித்து கத்தியால் வெட்டிவிட்டு அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், கையில் வைத்திருந்த செல்போன், ரூ.20 ஆயிரம் பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் காயம் அடைந்த பிரபாகரனை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.