நாகப்பட்டினம்
நின்று கொண்டிருந்த பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதி எலக்ட்ரீசியன் சாவு
|நின்று கொண்டிருந்த பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதி எலக்ட்ரீசியன் இறந்தார்.
வேதாரண்யம்:-
வேதாரண்யம் அருகே உள்ள விழுந்தமாவடி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மகன் வெங்கடேசன் (வயது24). எலக்ட்ரீசியன். சம்பவத்தன்று இவர் புதுப்பள்ளியை சேர்ந்த வினோத் (34) என்பவரை பின்னால் அமர வைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வேதாரண்யம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது கோவில்பத்து பஸ் நிறுத்தம் அருகே தனியார் பஸ் பயணிகளை இறக்கி கொண்டிருந்தது. அந்த பஸ்சின் பின்புறம் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த இருவரும் நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது வெங்கடேசன் இறந்து விட்டது தெரியவந்தது. வினோத்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வேட்டைக்காரனிருப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.