< Back
மாநில செய்திகள்
சிவகங்கை
மாநில செய்திகள்
பனைமரத்தில் மோட்டார்சைக்கிள் மோதி எலக்ட்ரீசியன் பலி
|6 Oct 2023 1:00 AM IST
பனைமரத்தில் மோட்டார்சைக்கிள் மோதியதில் எலக்ட்ரீசியன் உயிரிழந்தார்.
காளையார்கோவில்
காளையார்கோவில் அருகே வெற்றியூர் கிராமத்தை சேர்ந்தவர் தென்னிலை. இவருடைய மகன் முருகானந்தம் (வயது 30). எலக்ட்ரீசியன்.
இவர் நேற்று முன்தினம் இரவு காளையார்கோவிலில் ஒரு தியேட்டரில் நள்ளிரவு சினிமா பார்த்துவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் நண்பருடன் வெற்றியூரை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது நிலை தடுமாறி சாலை ஓரத்தில் இருந்த பனை மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் அவர் இறந்துவிட்டார். இவருடன் வந்தவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இதுகுறித்து காளையார்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.