< Back
மாநில செய்திகள்
மின்சாரம் தாக்கி 20 அடி உயரத்தில் இருந்து விழுந்த எலக்ட்ரீசியன் சாவு
திருவள்ளூர்
மாநில செய்திகள்

மின்சாரம் தாக்கி 20 அடி உயரத்தில் இருந்து விழுந்த எலக்ட்ரீசியன் சாவு

தினத்தந்தி
|
23 Feb 2023 2:08 PM IST

தொழிற்சாலையில் வேலை செய்யும்போது மின்சாரம் தாக்கி 20 அடி உயரத்தில் இருந்து விழுந்த எலக்ட்ரீசியன் பலியானார்.

கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் இரும்பை உருக்கி கம்பிகள் உற்பத்தி செய்திடும் தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு அரியலூரை சேர்ந்த கவுதம் (வயது 30) எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நேற்று முன்தினம் சுமார் 20 அடி உயரத்தில் கிரேனில் நின்று கொண்டு கவுதம் எலக்ட்ரீக்கல் வேலை செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது மின்சாரம் தாக்கியதில் அங்கிருந்து அவர் கீழே விழுந்தார். மேலிருந்து கீழே விழுந்த அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன் தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொன்னேரி அருகே உள்ள தடப்பெரும்பாக்கம் கிராமத்தை சரவணய்யா (வயது 46). இவரது மனைவி கீதா. இவர்களுக்கு 2 மகள் உள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு குடும்ப தகராறு காரணமாக கணவன்-மனைவி மற்றும் 2-வது மகள் ஆகியோர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிசிச்சைக்காக அனுமதித்தனர். இந்த நிலையில் கீதா சிசிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்