தர்மபுரி
எலக்ட்ரீசியன் வீட்டில் நகை- பணம் திருடியவர் கைது
|எலக்ட்ரீசியன் வீட்டில் நகை- பணம் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
பாப்பிரெட்டிப்பட்டி:-
பொம்மிடி அருகே பில்பருத்தி சாய் நகரை சேர்ந்தவர் தன்கதிர் செல்வன் (வயது 47). இவர் தனியார் கல்லூரியில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி லாவண்யா. இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகன் இனியன். அங்குள்ள பள்ளியில் படித்து வருகிறான்.
கணவன்-மனைவி 2 பேரும் மகனை பள்ளிக்கு அனுப்பிய பின்னர் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டனர். அன்று மாலை பள்ளிக்கு சென்ற சிறுவன் வீட்டுக்கு வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து சிறுவன் தனது தந்தைக்கு தகவல் தெரிவித்தான். அதன்பேரில் அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த ரூ.1 லட்சம், 1¼ பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காவேரிப்பட்டணம் பகுதியை ராஜ்குமார் (30) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.