< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
ஓட்டலில் திருடிய எலக்ட்ரீசியன் கைது
|15 Oct 2023 11:34 PM IST
ஓட்டலில் திருடிய எலக்ட்ரீசியன் கைது செய்யப்பட்டார்.
கரூர் கே.பி. நகர் பகுதியில் ஓட்டல் ஒன்று உள்ளது. இங்குள்ள இரும்பு பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர். இதுகுறித்து ஓட்டல் மேலாளர் புகழூரை சேர்ந்த தங்கரமணன் கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தினர். விசாரணையில் ஓட்டலில் திருடியது கரூர் காமராஜர் புரத்தை சேர்ந்த எலக்ட்ரீசியன் வினோத்குமார் (34) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.