திருவள்ளூர்
மனைவியை கிண்டல் செய்தவரை தாக்கிய எலக்ட்ரீசியன் கைது
|மனைவியை கிண்டல் செய்தவரை தாக்கிய எலக்ட்ரீசியன் கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம் ஸ்ரீ காளிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 33). எலக்ட்ரீசியன். இவரது மனைவி மாலா (28). அதே கிராமத்தைச் சேர்ந்தவர் சடையப்பன் (25). இவர் பிரகாஷ் மனைவி மாலாவிடம் கேலி கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மாலா தனது கணவர் பிரகாஷிடம் தெரிவித்தார். பிரகாஷ் சடையப்பனை என் மனைவியிடம் எதற்காக பிரச்சினை செய்கிறாய் என்று கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதில் இவர்கள் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பிரகாஷ் பிளேடால் சடையப்பனை வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த சடையப்பன் சிகிச்சைக்காக சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இது குறித்து சடையப்பன் ஆர்.கே.பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு எலக்ட்ரீசியன் பிரகாசை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.