< Back
மாநில செய்திகள்
விதிகளை கடைப்பிடிக்காமல் விபத்து ஏற்பட்டால் மின் பணியாளர்களே பொறுப்பு - மின்சார வாரியம்
மாநில செய்திகள்

'விதிகளை கடைப்பிடிக்காமல் விபத்து ஏற்பட்டால் மின் பணியாளர்களே பொறுப்பு' - மின்சார வாரியம்

தினத்தந்தி
|
31 Oct 2023 9:57 AM IST

பணிகளை தொடங்கும் முன்னர், மேற்பார்வை ஊழியர்கள் பாதுகாப்பு உபகரணங்களின் பயன்பாட்டை சரிபார்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

மின்சார பணிகளை மேற்கொள்ளும்போது மின்வாரிய ஊழியர்கள் பாதுகாப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது. விதிகளை கடைப்பிடிக்காமல் விபத்து ஏற்பட்டால் மின் பணியாளர்களே பொறுப்பு எனவும் மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும் பணிகளை தொடங்கும் முன்னர், மேற்பார்வை ஊழியர்கள் பாதுகாப்பு உபகரணங்களின் பயன்பாட்டை சரிபார்த்து, சரியான தனிமைப்படுத்துதலை உறுதி செய்ய வேண்டும் எனவும், பணியாளர்கள் பணியின்போது எர்த் ராட் பயன்படுத்தும் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.


மேலும் செய்திகள்