< Back
மாநில செய்திகள்
ரத்தினகிரி அருகே லாரி உரசியதில் மின் ஊழியர் பலி
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

ரத்தினகிரி அருகே லாரி உரசியதில் மின் ஊழியர் பலி

தினத்தந்தி
|
20 May 2023 11:39 PM IST

ரத்தினகிரி அருகே லாரி உரசியதில் மின் ஊழியர் பலியானார்.

ஆற்காடு

ரத்தினகிரி அருகே லாரி உரசியதில் மின் ஊழியர் பலியானார்.

ராணிப்பேட்டை மகாவீர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 36). இவர் விளாபாக்கத்தில் உள்ள மின்சார வாரியத்தில் தற்காலிக ஊழியராக வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் சென்று விட்டு இரவு ராணிப்பேட்டை நோக்கி மோட்டார்சைக்கிளில் வந்தார்.

ரத்தினகிரியை அடுத்த அரப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் வரும்போது பின்னால் வந்த லாரி விஜயகுமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது உரசியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த விஜயகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் ரத்தினகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்