< Back
மாநில செய்திகள்
மின்வாரிய இளநிலை பொறியாளர் பணியிடை நீக்கம்
திருச்சி
மாநில செய்திகள்

மின்வாரிய இளநிலை பொறியாளர் பணியிடை நீக்கம்

தினத்தந்தி
|
21 Jun 2023 12:47 AM IST

மின்வாரிய இளநிலை பொறியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

லால்குடி அருகே உள்ள கல்லக்குடி மின்வாரிய அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வருபவர் ஸ்ரீதர். இவரிடம் அந்த பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு மின்இணைப்பு வழங்க வேண்டி ஊர் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் அந்த மனு மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அவரது அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு அவரிடம் இது குறித்து கேட்டபோது, மின் இணைப்பு வழங்க வேண்டுமானால் கிராம நிர்வாக அலுவலர், தாசில்தாரிடம் தடையில்லா சான்று வாங்கி வரும்படி கூறி உள்ளார். அதோடு மட்டுமின்றி, மாவட்ட கலெக்டரையும் ஒருமையில் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. மேலும், இவ்வாறு அவர் பேசிய வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. இதனை தொடர்ந்து இளநிலை பொறியாளர் ஸ்ரீதரை பணியிடை நீக்கம் செய்து, திருச்சி பெருநகரம் மின்பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் பிரகாசம் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்