< Back
மாநில செய்திகள்
மின் விபத்துகளை தடுக்க புகார் தெரிவிக்கலாம்    அதிகாரி வேண்டுகோள்
கடலூர்
மாநில செய்திகள்

மின் விபத்துகளை தடுக்க புகார் தெரிவிக்கலாம் அதிகாரி வேண்டுகோள்

தினத்தந்தி
|
8 Nov 2022 12:15 AM IST

மின் விபத்துகளை தடுக்க புகார் தெரிவிக்கலாம் என்று அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.


மின் விபத்துகளை தடுக்க புகார் தெரிவிக்கலாம் என பொதுமக்களுக்கு அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக கடலூர் மின்வாரிய செயற்பொறியாளர் வெங்கடேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

புதைவடம் மூலம் வினியோகம்

கடலூர் கோண்டூர், எஸ்.என்.சாவடி, வரதராஜன்பிள்ளை நகர், ராஜாம்பாள் நகர், அரசு பொது மருத்துவமனை, வில்வநகர், பழைய கலெக்டர் அலுவலக பகுதி, தேவனாம்பட்டினம், சொரக்கல்பட்டு, புதுப்பாளையம், வண்ணாரப்பாளையம், கடலூர் துறைமுகம் முழுவதும், சிப்காட், செல்லங்குப்பம், சுத்துக்குளம் ஆகிய பகுதிகளில் புதைவடம் மூலம் மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வடகிழக்கு பருவமழை கடலூர் மாவட்டத்தில் தீவிரமடைந்துள்ளதால், புதைவட கேபிள் அமைக்கப்பட்ட பகுதிகளில் பள்ளம் தோண்டுவதோ, மின் உபகரண பெட்டிகளை தொடுவதோ, புதைவட மின்சாதன பெட்டிகளின் மேல் எந்தவித சுவரொட்டிகளை ஒட்டுவதோ, புதைவட மின்சாதன பெட்டிகள் அமைக்கப்பட்ட இடத்தில் குப்பைகளை கொட்டவோ அல்லது எரிக்கவோ கூடாது. மேலும் மின்கம்பத்தில் ஆடு, மாடுகளை கட்டுவதோ, மழைநீர் வடிய பள்ளம் தோண்டுவதோ முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

புகார்

மேற்கண்ட பகுதிகளை தவிர மற்ற பகுதிகளின் மேல் உள்ள மின்பாதைகளில் கம்பிகள் அறுந்து கீழே விழுந்தாலோ, சேதமடைந்த மின்கம்பம் மற்றும் தாழ்வாக செல்லும் மின்பாதை, சேதமடைந்த ஸ்டே கம்பிகள் மற்றும் சேதமடைந்த தெருவிளக்கு பெட்டிகளை பார்த்தால் உடனடியாக அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் தெரிவிக்கலாம். மேலும் 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இதுதவிர வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள கடலூர் மின்பகிர்மான வட்ட அலுவலகத்தில் செயல்படும் 9445855768 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கோ அல்லது 9445856039 என்ற செல்போன் எண்ணிற்கோ தகவல் தெரிவித்து மின்விபத்துகளை தவிர்க்கலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்