< Back
மாநில செய்திகள்
மின்ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
மதுரை
மாநில செய்திகள்

மின்ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
1 Feb 2023 2:39 AM IST

கேங்மேன் பணியாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் மதுரை புதூர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக பணி மாற்றம் செய்திட கோரியும், கேங்மேன் பணியாளர்கள் சொந்த மாவட்டங்களுக்கு செல்ல ஊர் மாறுதல் உத்தரவு வழங்கிட கோரியும், முத்தரப்பு ஒப்பந்தத்தின்படி பயிற்சி காலத்தை மூன்று மாதமாக குறைத்து அன்றைய தேதியில் இருந்து காலமுறை ஊதியம் வழங்கிட கோரியும், விடுப்பு உள்ளிட்ட அனைத்து சட்ட சலுகைகளையும் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கேங்மேன் பணியாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் மதுரை புதூர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மதுரை திட்ட தலைவர் திருமுருகன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் அரவிந்தன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மின் திட்டச் செயலாளர் செல்வராஜ் பேசினார். முடிவில் நாகநாதன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்