< Back
மாநில செய்திகள்
சென்னை சென்டிரல்-ஆவடி இடையிலான மின்சார ரெயில்கள் ரத்து

கோப்புப்படம்

மாநில செய்திகள்

சென்னை சென்டிரல்-ஆவடி இடையிலான மின்சார ரெயில்கள் ரத்து

தினத்தந்தி
|
30 July 2024 10:02 PM IST

சென்னை சென்டிரல்-ஆவடி இடையிலான மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஆவடி பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை சென்டிரல், பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் ரெயில் நிலையத்தில் இருந்து நாளை (புதன்கிழமை) இரவு 11.40, 11.50 மணிக்கு ஆவடி செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

மேலும், சென்னை சென்டிரல்-ஆவடி இடையிலான மின்சார ரெயிலும், ஆவடி-பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இடையிலான மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது. பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து சென்டிரல் செல்லும் மின்சார ரெயில், பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்-ஆவடி இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டையில் இருந்து நாளை இரவு 9 மணிக்கு சென்டிரல் வரும் மின்சார ரெயில் ஆவடி, கொருக்குப்பேட்டை, வியாசர்பாடி ஜீவா ரெயில் நிலையங்கள் வழியாக இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்