< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னை கடற்கரை- திருமால்பூர் இடையே செல்லும் மின்சார ரெயில் ரத்து
|25 Nov 2023 11:34 PM IST
வாலாஜாபாத் ரெயில் நிலையத்தில் வரும் 28-ந் தேதி மற்றும் 29-ந் தேதிகளில் தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுகிறது.
சென்னை,
சென்னை கடற்கரை- திருமால்பூர் இடையே செல்லும் மின்சார ரெயில் ரத்து செய்யப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "செங்கல்பட்டு- அரக்கோணம் வழித்தடத்தில் வாலாஜாபாத் ரெயில் நிலையத்தில் வரும் 28-ந் தேதி மற்றும் 29-ந் தேதிகளில் தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுகிறது.
எனவே அன்றைய தேதிகளில் சென்னை கடற்கரையில் இருந்து காலை 7.27 மணிக்கு திருமால்பூர் செல்லும் மின்சார ரெயில் செங்கல்பட்டு- திருமால்பூர் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. அதே தேதிகளில் திருமால்பூரில் இருந்து காலை 11.05 மணிக்கு சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரெயில் திருமால்பூர்- செங்கல்பட்டு இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.