< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னை சென்டிரல்-ஆவடி இடையே மின்சார ரெயில் ரத்து
|20 Sept 2024 10:10 AM IST
சென்னை சென்டிரல்-ஆவடி இடையே மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை சென்டிரலில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வரும் 22-ந்தேதி வரை இரவு 12.15 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது. மேலும், பட்டாபிராமில் இருந்து இன்று, 21 ஆகிய தேதிகளில் இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு சென்டிரல் வரும் மின்சார ரெயில் ஆவடி - சென்டிரல் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல, பட்டாபிராமில் இருந்து இன்று முதல் வரும் 22-ந்தேதி வரை காலை 3.30 மணிக்கு புறப்பட்டு சென்டிரல் வரும் மின்சார ரெயில் பட்டாபிராம் - ஆவடி இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.