< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே மின்சார ரெயில் ரத்து
|18 Sept 2023 12:48 AM IST
தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை எழும்பூர் - விழுப்புரம் இடையே உள்ள வழித்தடத்தில் உள்ள தாம்பரம் பகுதியில் தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுவதால், நாளை(செவ்வாய்க்கிழமை) முதல் அக்டோபர் மாதம் 3-ந்தேதி வரை இரவு 11.59 மணிக்கு சென்னை கடற்கரை - தாம்பரம் செல்லும் மின்சார ரெயில் மற்றும் மறுமார்க்கமாக அதே தேதிகளில் இரவு 11.40 மணிக்கு தாம்பரம் - கடற்கரை செல்லும் மின்சார ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல வருகிற 24-ந்தேதி மற்றும் அக்டோபர் 1-ந்தேதிகளில் இரவு 11.59 மணிக்கு கடற்கரை - தாம்பரம் செல்லும் மின்சார ரெயில், அதே தேதிகளில் இரவு 11.35 மணிக்கு தாம்பரம் - கடற்கரை செல்லும் மின்சார ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.