< Back
மாநில செய்திகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்
மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
|13 Nov 2022 1:43 AM IST
தஞ்சையில் செல்போனுக்கு சார்ஜ் போட்ட போது மின்சாரம் தாக்கி வாலிபர் இறந்தார்.
தஞ்சாவூர்;
தஞ்சை மாரியம்மன் கோவில் கடகடப்பை பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 23). சம்பவத்தன்று இவர் தனது வீட்டில் செல்போனில் சார்ஜ் போட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவரை மின்சாரம் தாக்கியுள்ளது. இதனால் சத்தம் போட்ட அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து விட்டதாக கூறப்படுகிறது. சத்தம் கேட்டு வந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், விக்னேஷ் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்தில் விக்னேஷ் அண்ணன் ஈஸ்வரன் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.