< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
திண்டுக்கல் நந்தனம் சாலையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
|21 Feb 2023 6:41 AM IST
நந்தனம் சாலை பகுதியில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் குஞ்சனம்பட்டி பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி என்ற நபர், நந்தனம் சாலை பகுதியில் தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்த போது திடீரென அதில் இருந்து புகை கிளம்பியுள்ளது. இதனால் சுதாரித்துக் கொண்டு பாலசுப்பிரமணி சற்று விலகிச் சென்றுள்ளார்.
இந்நிலையில் ஒரு சில வினாடிகளில் அந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் மளமளவென தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இதையடுத்து சிறிது நேரத்தில் வாகனம் முற்றிலும் எரிந்து தீக்கிரையானது. இந்த சம்பவத்தில் பாலசுப்பிரமணி அதிர்ஷ்டவசமாக காயங்களின்றி உயிர்தப்பினார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.