< Back
மாநில செய்திகள்
பட்டுக்கோட்டையில் கழிவுநீர் கால்வாய்க்கு உள்ளே மின்கம்பம் - பொதுக்கள் அதிர்ச்சி
மாநில செய்திகள்

பட்டுக்கோட்டையில் கழிவுநீர் கால்வாய்க்கு உள்ளே மின்கம்பம் - பொதுக்கள் அதிர்ச்சி

தினத்தந்தி
|
28 Sept 2022 10:33 AM IST

பட்டுக்கோட்டையில் மின்கம்பத்தை கழிவுநீர் கால்வாயின் உள்ளே வைத்து கட்டும் அவலம். அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பட்டுக்கோட்டை,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பெண்கள் பள்ளியிலிருந்து பெரிய கடைத்தெரு செல்லும் சாலையில் புதிதாக கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டு வருகிறது.

இந்த கழிவுநீர் கால்வாயின் நடுவே ஏற்கனவே உள்ள மின்கம்பத்தை சுற்றி சிமெண்ட் கட்டை உள்ளது. இதனால் கழிவநீர் கால்வாயில் சாக்கடை ஓடாமல் தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

தற்போது கட்டுமான பணிகளில் ஈடுபட்டிருக்கும் நகராட்சி காண்ட்ராக்டர் கழிவுநீர் கால்வாயில் சாக்கடை ஓடுவதற்கு தடையாக உள்ள மின்கம்பத்தை அப்புறப்படுத்தாமல் பணிகளை தொடர்கின்றனர். இதனை நகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் செய்திகள்