< Back
மாநில செய்திகள்
சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே மின்கம்பம் சரிந்து ரெயில் பெட்டி சேதம்
மாநில செய்திகள்

சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே மின்கம்பம் சரிந்து ரெயில் பெட்டி சேதம்

தினத்தந்தி
|
10 Dec 2022 5:19 PM IST

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே ரெயில்வே யார்டில் மின்கம்பம் சரிந்து ரெயில் பெட்டி சேதமடைந்தது.

சென்னை,

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகில் இருக்கக்கூடிய பேசின் பாலத்தின் பக்கத்தில் ரெயில்வே யார்டில் மின்கம்பம் சரிந்து ரெயில் பெட்டி சேதமடைந்தது.

ரெயில் பெட்டிகள் பராமரிப்பு மற்றும் சுத்தம் செய்யும் பணிகள் இங்கு நடைபெறும் நிலையில், நேற்று இரவு 9.30 மணி அளவில் புயலால் மின்கம்பம் சாய்ந்து ரெயில் பெட்டி மீது விழுந்துள்ளது.

சென்னையிலிருந்து ஆலப்புழா செல்லக்கூடிய விரைவு ரெயில் மீது விழுந்த நிலையில், உடனடியாக ரெயில்வே ஊழியர்கள் மின்கம்பத்தை சரி செய்தனர்.

மேலும் செய்திகள்