< Back
மாநில செய்திகள்
மின் மோட்டார் திருடியவர் கைது
திருச்சி
மாநில செய்திகள்

மின் மோட்டார் திருடியவர் கைது

தினத்தந்தி
|
3 April 2023 4:14 AM IST

மின் மோட்டார் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி பாலக்கரையை சேர்ந்தவர் அந்தோணி பிரிட்டோ (வயது 44). இவர் கல்லூரியில் பணியாற்றி வருகிறார். இவரது வீட்டில் மல்லிகைபுரத்தை சேர்ந்த ஜெபஸ்டின் ஸ்டீபன் பெயிண்டு அடிக்கும் பணியில் ஈடுபட்டார். சம்பவத்தன்று அந்தோணி பிரிட்டோ வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டு சிறிது நேரம் கழித்து வீடு திரும்பினார். அப்போது வீட்டில் இருந்த மின் மோட்டார் திருட்டு போய் இருந்தது. இது குறித்து அவர் பாலக்கரை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் ஜெபஸ்டின் ஸ்டீபன் மின் மோட்டாரை திருடியது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்