தர்மபுரி
16 இடங்களில் சோலார் வேகவரம்பு மின்விளக்குகள்
|தொப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் 16 இடங்களில் சோலார் வேகவரம்பு மின்விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளது.
நல்லம்பள்ளி
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே தொப்பூர் வனப்பகுதி கட்டமேடு முதல் தொப்பூர் போலீஸ் குடியிருப்பு வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருகிறது. இதனை தடுக்கும் விதமாக தர்மபுரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் கட்டமேட்டில் இருந்து தொப்பூர் போலீஸ் குடியிருப்பு இடையே உள்ள சாலையின் நடுவே ஏற்கனவே 10 வேகவரம்பு எச்சரிக்கை சோலார் மின் விளக்குகள் அமைக்கப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக 6 வேகவரம்பு சோலார் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் தொடக்க விழா நேற்று நடந்தது. இதில் தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் கலந்து கொண்டு வேகவரம்பு சோலார் மின்விளக்குகளை தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதில் மோட்டார் வாகன ஆய்வாளர் தரணிதர் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஞானசேகர், முருகன், யுகேந்தீர், அருண்குமார், சதீஷ் திலீப்குமார் உள்ளிட்ட சுங்கச்சாவடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.