திருவண்ணாமலை
மின்வாரிய கேங்மேன் விஷம் குடித்து தற்கொலை
|சந்தவாசல் அருகே மின்வாரிய கேங்மேன் விஷம் குடித்து தற்கொலை
கண்ணமங்கலம்
சந்தவாசல் அருகே கிருஷ்ணாபுரம் கிராமத்தில் ரோடு தெருவில் வசித்தவர் மன்னார்சாமியின் மகன் மணிகண்டன் (வயது 30), சந்தவாசல் மின் வாரிய அலுவலகத்தில் கேங்மேனாக வேலை பார்த்து வந்தார்.
மனைவி மீனாவுக்கும், மணிகண்டனின் தாயாரான ஜெயலட்சுமிக்கும் அடிக்கடி வாய்த்தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மருமகளிடம் கோபித்துக் கொண்டு ஜெயலட்சுமி வீட்டில் இருந்து ெவளியே சென்று விட்டார்.
மணிகண்டன், கோபித்துச் சென்ற ஜெயலட்சுமியை வீட்டுக்கு அழைத்து வர முயன்றார்.
ஆனால், மனைவி மீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால மனமுடைந்த மணிகண்டன் 7-ந்தேதி தனது வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்து விட்டு மயக்கமடைந்து கிடந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து மீனா சந்தவாசல் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.