< Back
மாநில செய்திகள்
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம்கள்
அரியலூர்
மாநில செய்திகள்

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம்கள்

தினத்தந்தி
|
22 Oct 2023 12:55 AM IST

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம்கள் அரியலூரில் அடுத்த மாதம் நடைபெறுகிறது.

அரியலூர் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வருகிற 27-ந்தேதி வெளியிடப்பட உள்ளது. 149-அரியலூர் சட்டமன்ற தொகுதி மற்றும் 150-ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் எதிர்வரும் 1.1.2024-ம் நாளை தகுதி நாளாக கொண்டு 2024-ம் ஆண்டிற்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் வெளியிடும் பொருட்டு, பெயர் சேர்த்தல், நீக்கல், பிழைத்திருத்தம் மற்றும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றுக்கு விண்ணப்பிக்க அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும், சிறப்பு முகாம்கள் அடுத்த மாதம் (நவம்பர்) 4, 5, 18 மற்றும் 19-ந்தேதிகளில் நடைபெறுகிறது.

இந்த முகாம் நாட்களை பயன்படுத்தி 1.1.2024-ம் நாளில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் தங்கள் பெயரினை புதிதாக சேர்க்க படிவம் 6-ம், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்களின் பெயர், முகவரி, வயது மற்றும் இதர பிழைகளை திருத்தம் செய்ய படிவம் 8-ஐயும், அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் பெற்று, பூர்த்தி செய்து வழங்கிடுமாறு பொதுமக்களுக்கு கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்