< Back
மாநில செய்திகள்
வாக்காளர் பட்டியல் - சிறப்பு முகாம் தேதி மாற்றம்
மாநில செய்திகள்

வாக்காளர் பட்டியல் - சிறப்பு முகாம் தேதி மாற்றம்

தினத்தந்தி
|
14 Nov 2023 1:42 AM IST

தமிழக அரசால், 18.11.2023 அன்று பணிநாளாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சிறப்பு முகாம் தேதி மாற்றப்பட்டு உள்ளது.

சென்னை,

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் வருகிற 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.

இந்த நிலையில், அந்த தேதிகளை மாற்றி வருகிற 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. தமிழக அரசால், 18.11.2023 அன்று பணிநாளாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சிறப்பு முகாம் தேதி மாற்றப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்