< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பா.ஜ.க. இல்லாத மற்ற கட்சிகளுடன் தேர்தல் கூட்டணி - ஜெயக்குமார்
|4 Feb 2024 1:05 PM IST
தேர்தல் அறிக்கை தொடர்பாக மக்களை சந்தித்து கருத்துக் கேட்க உள்ளதாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை,
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் 2-வது ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
நாடாளுமன்றத்தேர்தல் கூட்டணிக்கு பா.ஜ.க. இல்லாத கட்சிகளை வரவேற்கிறோம். கூட்டணிக்கு பெரிய கட்சிகள் பல பேசிக்கொண்டிருக்கின்றன. சிறப்பாக தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளோம்.
தேர்தல் அறிக்கை தொடர்பாக மக்களை சந்தித்து கருத்துக் கேட்க உள்ளோம். நாளை வேலூர் மண்டலம், 6-ம் தேதி விழுப்புரம் மண்டலத்தில் மக்களை சந்திக்கிறோம், இவ்வாறு அவர் கூறினார்.