< Back
மாநில செய்திகள்
திருவள்ளூரில் மின்னணு வாக்குப்பதிவு எந்திர சரிபார்ப்பு பணிகளை தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆய்வு
திருவள்ளூர்
மாநில செய்திகள்

திருவள்ளூரில் மின்னணு வாக்குப்பதிவு எந்திர சரிபார்ப்பு பணிகளை தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆய்வு

தினத்தந்தி
|
5 July 2023 6:06 AM IST

திருவள்ளூரில் மின்னணு வாக்குப்பதிவு எந்திர சரிபார்ப்பு பணிகளை தேர்தல் ஆணைய அதிகாரிகளான சுவார்ன் சிங், விக்ரம் கான் மற்றும் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற பொது தேர்தலை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள இந்திய தேர்தல் ஆணைய மின்னணு வாக்குப்பதிவு எந்திர சேமிப்பு கிடங்கில் இருப்பில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை முதல்நிலை சரிபார்ப்பு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக நேற்று அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டரால் திறக்கப்பட்டு, முதல் நிலை சரிபார்ப்பு பணி தொடங்கி வைக்கப்பட்டது.

அதிகாரிகள் ஆய்வு

தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தினால் பார்வையாளராக நியமனம் செய்யப்பட்ட சுவார்ன் சிங் மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தில் பிரிவு அலுவலராக பணிபுரியும் விக்ரம் கான் ஆகியோர் மின்னணு வாக்குப்பதிவு எந்திர சேமிப்பு கிடங்கை பார்வையிட்டு வாக்குப்பதிவு எந்திரங்களை முதல்நிலை சரிபார்ப்பு பணி மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து பல்வேறு சந்தேகங்களை கேட்டு விரிவாக ஆய்வு மேற்கொண்டனர்.

தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் மேற்பார்வையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை முதல் நிலை சரிபார்ப்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்