< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
'திருக்கோவிலூர், விளவங்கோடு இடைத்தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்' - சத்யபிரதா சாகு
|2 March 2024 8:00 PM IST
இடைத்தேர்தலை நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து நடத்துவது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என சத்யபிரதா சாகு தெரிவித்தார்.
சென்னை,
இந்திய தேர்தல் ஆணையம் சார்பில், சென்னை காமராஜர் சாலையில் இன்று 'தேர்தல் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி' நடைபெற்றது. இதனை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தொடங்கி வைத்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சத்யபிரதா சாகு, தமிழகத்தில் காலியாக உள்ள திருக்கோவிலூர் மற்றும் விளவங்கோடு ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து நடத்துவது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என்று தெரிவித்தார்.
இளைஞர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா? என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். மேலும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு முதற்கட்டமாக இரண்டு துணை ராணுவப்படை குழுக்கள் தமிழகம் வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.