< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பாஜக விரும்புவதைதான் தேர்தல் ஆணையம் செய்கிறது - முன்னாள் அதிமுக எம்.பி கே.சி.பழனிசாமி
|31 July 2022 7:23 PM IST
பாஜக விரும்புவதைதான் தேர்தல் ஆணையம் செய்கிறது என்று முன்னாள் அதிமுக எம்.பி கே.சி.பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை,
பாஜக விரும்புவதைதான் தேர்தல் ஆணையம் செய்கிறது என்று முன்னாள் அதிமுக எம்.பி. கே.சி.பழனிசாமி கூறியுள்ளார்.
இதுகுறித்து கே.சி.பழனிசாமி கூறியதாவது:-
ஒற்றைத்தலைமை, தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிற தலைமை என்பது வரவேற்க தகுந்தது. நீதிமன்ற தீர்ப்பின் மீது அதிமுக தொண்டர்களுக்கு பெரிய நம்பிக்கை இல்லை. அதேபோல் தேர்தல் ஆணையத்தின் மீதும் நம்பிக்கை இல்லை. மத்தியில் ஆளும் பாஜக விரும்புவதற்கேதுவாகத்தான் தேர்தல் ஆணையம் தன்னுடைய முடிவுகளை எடுக்கிறது.
அதிமுக தொண்டர்களுக்கு முறையாக எல்லாருக்கும் உறுப்பினர் அட்டையை கொடுத்து, பொதுவான நபர்களை நியமித்து தொண்டர்களை வைத்து பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த வேண்டும். ஒன்றுபட்ட தமிழ்நாடாக இருப்பதற்கு அதிமுக ஒன்றுபட்டதாக இருக்க வேண்டும்.
இவ்வாறு கூறினார்.