< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூரில் தீக்குளித்து மூதாட்டி தற்கொலை
|4 Oct 2023 2:16 AM IST
ஸ்ரீவில்லிபுத்தூரில் தீக்குளித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் மாதா நகரை சேர்ந்தவர் மரிகிருதா (வயது 67). இவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.