< Back
மாநில செய்திகள்
தலைமைச்செயலகம் அருகே தீக்குளித்த முதியவர் சிகிச்சை பலனின்றி பலி
சென்னை
மாநில செய்திகள்

தலைமைச்செயலகம் அருகே தீக்குளித்த முதியவர் சிகிச்சை பலனின்றி பலி

தினத்தந்தி
|
6 Jun 2022 7:47 AM IST

சென்னை தலைமைச்செயலகத்துக்கு மனு கொடுக்க வந்த முதியவர் தீக்குளித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சென்னை:

திருவள்ளூர் மாவட்டம் திருவலங்காடு நிர்மலா நகர் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 72). இவரிடம், முகலிவாக்கத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் ரூ.14 லட்சம் வாங்கிக்கொண்டு, அதனை திருப்பித் தராமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், தன்னுடைய பணத்தை சுப்பிரமணியிடம் இருந்து திருப்பி வாங்கித்தரவேண்டும் என்று கடந்த 1-ந்தேதி சென்னை தலைமைச்செயலகத்துக்கு மனு கொடுக்க பொன்னுசாமி வந்தார். அப்போது, பொன்னுசாமி திடீரென தன் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்தார்.

இதில் படுகாயம் அடைந்த அவரை கோட்டை போலீசார் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி பொன்னுசாமி நேற்று உயிரிழந்தார்.

மேலும் செய்திகள்