< Back
மாநில செய்திகள்
வீட்டில் தவறி விழுந்த முதியவர் சாவு
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

வீட்டில் தவறி விழுந்த முதியவர் சாவு

தினத்தந்தி
|
3 July 2023 12:15 AM IST

புதுக்கடை அருகே வீட்டில் தவறி விழுந்த முதியவர் சாவு

புதுக்கடை,

புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு மாராயபுரம் பகுதி பேர வளாகத்தை சேர்ந்தவர் சோமசுந்தரன் நாயர் (வயது 88). சம்பவத்தன்று சோமசுந்தரன் நாயர் தனது வீட்டில் இருந்து வெளியே வந்தார். அப்போது திடீரென கால்தவறி கீழே விழுந்ததாக தெரிகிறது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை உறவரினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சோமசுந்தரன்நாயர் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி அவரது மகள் கீதா புதுக்கடை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்