< Back
மாநில செய்திகள்
வாகனம் மோதி முதியவர் பலி
திருப்பத்தூர்
மாநில செய்திகள்

வாகனம் மோதி முதியவர் பலி

தினத்தந்தி
|
18 Feb 2023 6:44 PM GMT

வாகனம் மோதி முதியவர் பலியானார்.

வாலாஜா

வாகனம் மோதி முதியவர் பலியானார்.

வாலாஜாவை அடுத்த வன்னிவேடு பகுதி பைபாஸ் ரோட்டில் கடந்து சென்றவர் மீது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இறந்தவருக்கு சுமார் 65 வயது இருக்கும்.

தகவல் அறிந்த வாலாஜா போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார் என்பது குறித்தும் விபத்துக்கு காரணமான வாகனம் குறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்