< Back
மாநில செய்திகள்
திருச்சி அரசு ஆஸ்பத்திரி கழிவறையில் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை
திருச்சி
மாநில செய்திகள்

திருச்சி அரசு ஆஸ்பத்திரி கழிவறையில் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
22 Aug 2022 6:53 PM IST

திருச்சி அரசு ஆஸ்பத்திரி கழிவறையில் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.


கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 65). இவர் அந்த பகுதியில் சென்டிரிங் வேலை பார்த்து வந்தார். வயிற்று வலியால் அவதி அடைந்து வந்த இவர் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவு கட்டிடத்தில் உள்ள வார்டில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் அவர் 5-வது மாடியில் உள்ள கழிவறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மாரிமுத்துவின் மகன் ரகுநாதன் கொடுத்த புகாரின் பேரில் திருச்சி அரசு ஆஸ்பத்திரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் வயிற்று வலி தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

மேலும் செய்திகள்