< Back
மாநில செய்திகள்
ஊத்துக்கோட்டை அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை
திருவள்ளூர்
மாநில செய்திகள்

ஊத்துக்கோட்டை அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை

தினத்தந்தி
|
13 Sept 2023 12:34 PM IST

ஊத்துக்கோட்டை அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள அம்மம்பாக்கம் கோவில் தெருவை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 70). இவருடைய மனைவி பார்வதி (வயது 60).

குடும்ப செலவினங்கல் குறித்து அன்பழகன்- பார்வதி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். நேற்றும் தகராறு ஏற்பட்டது.

இதனால் பார்வதி கோபித்துக்கொண்டு வீட்டுக்கு வெளியே சென்று விட்டார். மனவேதனை அடைந்த அன்பழகன் வீட்டில் பூச்சி மருந்து குடித்தார்.

ஆபத்தான நிலையில் இருந்த அவரை கச்சூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பயனின்றி அன்பழகன் இறந்தார்.

இதுகுறித்து பென்னாலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்