< Back
மாநில செய்திகள்
கும்மிடிப்பூண்டி அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை
திருவள்ளூர்
மாநில செய்திகள்

கும்மிடிப்பூண்டி அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை

தினத்தந்தி
|
16 Aug 2022 12:36 PM IST

கும்மிடிப்பூண்டி அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே உள்ள பூதூர் கிராமத்தில் வசித்து வந்தவர் ஜீவரத்தினம் (வயது 67). இவர் உடல்நலம் சரியில்லாத காரணத்தால் மன உளைச்சலில் பூச்சி மருந்தை (விஷம்) குடித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்றுவந்த ஜீவரத்தினம் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

இதுகுறித்து பாதிரிவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்