< Back
மாநில செய்திகள்
விஷம் குடித்து முதியவர் தற்கொலை
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

விஷம் குடித்து முதியவர் தற்கொலை

தினத்தந்தி
|
3 Oct 2022 2:39 AM IST

திருவட்டார் அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை

திருவட்டார்,

திருவட்டார் அருேக கண்ணங்கரையை சேர்ந்தவர் தாசன் (வயது 71), தொழிலாளி. இவருடைய மனைவி லீலா (67). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. சம்பவத்தன்று தாசன் வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி லீலா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தாசனை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் தாசன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்