< Back
மாநில செய்திகள்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்
விஷம் குடித்து முதியவர் தற்கொலை
|19 Aug 2022 11:38 PM IST
புதுக்கடை அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை
புதுக்கடை,
புதுக்கடை அருகே உள்ள விழுந்தயம்பலம் குஞ்சாகோடு பகுதியை சேர்ந்தவர் வேதமணி (வயது76). இவரது மனைவி கடந்த 10 மாதங்களுக்கு முன்பு இறந்தார். அதன் பிறகு வேதமணி மிகுந்த மனவருத்தத்தில் இருந்துள்ளார். இந்தநிலையில் சம்பவத்தன்று அவர் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வேதமணி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மகன் ஜெபசிங் கொடுத்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.