கன்னியாகுமரி
விஷம் குடித்து முதியவர் தற்கொலை
|விஷம் குடித்து முதியவர் தற்கொலை
களியக்காவிளை:
களியக்காவிளை அருகே உள்ள பளுகல் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட மலையடியை சேர்ந்தவர் சத்தியதாஸ் (வயது63). இவருக்கு சுமதி என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். மகள்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. சத்தியதாஸ் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு தென்னை மரம் ஏறிய போது தவறி விழுந்து கால் முறிந்தது. இதற்கு சிகிச்சை பெற்று வந்தார். அத்துடன் வீட்டின் அருகில் பெட்டிக்கடையும் நடத்தி வந்தார்.
இந்தநிலையில், இவர் கடந்த சில நாட்களாக மிகுந்த மன வேதனையில் இருந்தார். சம்பவத்தன்று மருத்துவமனைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் தேடிப் பார்த்தபோது அவரது பழைய வீட்டில் விஷம் குடித்து தற்கொலை ெசய்த நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து பளுகல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.