< Back
மாநில செய்திகள்
முதியவர் விஷம் குடித்து தற்கொலை
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

முதியவர் விஷம் குடித்து தற்கொலை

தினத்தந்தி
|
16 Jun 2022 11:36 PM IST

ஆரல்வாய்மொழி,

ஆரல்வாய்மொழி அருகே உள்ள அனந்தபத்மநாபபுரம் அம்மன் கோவில் வடக்குதெருவை சேர்ந்தவர் தங்கமணி (வயது 70). இவருடைய மனைவி தங்கலெட்சுமி. இவர்களுக்கு 4 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. தங்கமணி மனைவியுடன் தனியாக வசித்து வந்தார். கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால், தங்கமணி கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.

சம்பவத்தன்று தங்கலெட்சுமி அருகில் உள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பினார். அப்போது, தங்கமணி விஷம் குடித்து விட்டு வாந்தி எடுத்த நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர், கணவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு சிகிச்சை பலனின்றி தங்கமணி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்